மனச்சோர்வு தற்கொலை
தடுப்பது எப்படி?
நன்றி .ஆனந்த விகடன்
தற்கொலை முடிவை எடுப்பவர்கள் பெரும்பாலும் சென்சிட்டிவ்வான நபர்களாக இருப்பார்கள். பெரிய பெரிய தோல்விகளில் இருந்து மீண்டு வந்திருப்பார்கள். ஆனால், சிறு தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாது. இது ஒரு வகையான ஆளுமை.
மனநல ஆலோசகர் வந்தனா.
“பெரும்பாலான தற்கொலைகளை ஆய்வுசெய்தால், மனச்சோர்வுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது. மனச்சோர்வு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தொழிலதிபர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சித்தார்த்தா தற்கொலைசெய்துகொண்டதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றைத் தவிர்த்து, மேலும் இரு காரணங்கள் உள்ளன. அதை, `பயோசைக்கோசோஷியல் ஃபேக்டர்’ (Biopsychosocial factor) என்போம்.
தடுப்பது எப்படி?
தற்கொலை செய்துகொள்வது என்பது 'சட்'டென எடுக்கும் ஒரு முடிவு. அந்த முடிவைத் தள்ளிப்போடுவதால், தற்கொலையைத் தவிர்க்கலாம். இந்த மாதிரியான எண்ணம் உள்ளவர்களால் உறவினர், நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசமுடியாது. ஆனால், அவர்களால் முகம் தெரியாத நபரிடம் செல்போனில் பேச முடியும் என்பதால், தற்கொலை தடுப்பு மையங்களைத் தொடர்புகொள்ளலாம். இதைத் தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
விபத்தில் காயமடைந்தால் உடனே மருத்துவரை அணுகுகிறோம். ஆனால், மனச்சோர்வு ஏற்பட்டால், பெரும்பாலானோர் மனநல மருத்துவரை அணுகுவதில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலத்தில் பிரச்னை என்றால், குடும்ப உறுப்பினர்கள் அருகிலிருந்து கவனித்துக்கொள்வதுபோல மனச்சோர்வு ஏற்படும்போதும் உடனிருந்து கவனித்து, அரவணைக்க வேண்டும். பிரச்னையைச் சரிசெய்ய உரிய மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அணுகவேண்டியது அவசியம். அப்படிச் செய்தால், பெரும்பாலான தற்கொலைகளைத் தடுக்கலாம்” என்கிறார், வந்தனா.
நன்றி .ஆனந்த விகடன்
No comments:
Post a Comment