தற்கொலைக்கு என்ன தான் தீர்வு ???
தற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது?
நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன அழுத்தம் மன இறுக்கம் போன்றவைஏற்படுகின்றன. செரடோனின் சுரத்தலை தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணம் குறைக்கப்படுகிறது.
தற்கொலை செய்துகொள்பவர்களிடம் அதற்கு முன்னதாக சில மாற்றங்கள் காணப்படுகின்றன. உடனிருப்பவர்களால் அந்த மாற்றங்களை உணர முடியும்.
அடிப்படை குணாதிசயங்களில் மாற்றம் எதிலும் பிடிப்பின்றி தனியே ஒதுங்கியிருத்தல், அடிக்கடி எரிச்சலடைதல், வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை திடீரென அழுகை...கோபம்...துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல் மரணத்தைப்பற்றி அடிக்கடி பேசுதல் ஆகிய மாற்றங்களை நெருங்கிய தொடர்புடையவர்கள் கண்டறிந்து தற்கொலைகளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.
தற்கொலை தீர்வுகள் :
1. மனம்விட்டு பேசுதல் :
மன உளைச்சலை மனதுக்குள்ளேயே வைத்து
பூட்டி
விடுவதால்
ஒன்றும்
ஆகிவிடப்போவதில்லை.
இன்னொருவரிடம் பேச வேண்டும். அவருடன் மனம்விட்டு பேசுவதால் உங்களுக்கு மனதின் பாரம் சற்று இறங்குவதை நீங்களாகவே உணர்வீர்கள்.
சிலவேளை நீங்கள் விஷயத்தை பகிர்ந்து கொண்டவர் அந்தப் பிரச்சினைக்கு தகுந்த தீர்வையும் சொல்வார்.
எதையும் வெளிக்காட்டாமல் இருந்தால்
மன
உளைச்சல்
அதிகமாகி
நாளடைவில்
தற்கொலைக்குக்
கூட
முயல்வர்.
2. சத்துள்ள
உணவு
உட்கொள்ளல்
:
முதலில் வேளா வேளைக்கு சாப்பிட்டு உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மனதை தாக்கும் ஒரு பிரச்சினைக்கு தெளிவாக ஒரு தீர்வு காணலாம்.
3. தினமும்
உடற்பயிற்சி
செய்தல்
:
மனதை திடமாக வைத்துக் கொள்ள முதலில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது விளையாட்டில் தினமும் ஈடுபட வேண்டும்.
அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது நமது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதோடு இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் மனதுக்கும் ஒரு தெம்பு கிடைப்பதை நீங்களாகவே உணர்வீர்கள்.
4. தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். ஞாபக சக்தி புத்தி கூர்மை அதிகரித்து மன உளைச்சல் மன அழுத்தம் நீங்குகிறது அலைபாயும் மனம் அமைதியடைகிறது சிந்தனை ஆற்றலும் ஞாபக சக்தியும் கூடுகிறது நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது. பொறுமை விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.
5. நல்ல தூக்கம் இயற்கையின் மாமருந்து : தூக்கம்தான் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. ஒரு மனிதன் தினமும் தன்னைத்தானே புதுமைப்படுத்தி புத்துணர்வு பெறச் செய்வதற்கு தூக்கம் மிகவும் அவசியம்.
அதிக நேரம் தூங்குபவர்களுக்குத்தான் தற்கொலை எண்ணம் தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.
எனவே அதிகமாகவும் தூநு்காதீர்கள்.குறைவாகவும் தூநு்காதீர்கள்
6. பெற்றோர்களே
மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை.
‘படிக்காமலேயே வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் இருக்கிறார்கள்’ என்று பிள்ளைகளிடம் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை விதையுங்கள். தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், ”பரவாயில்லை… திரும்பவும் எழுதி பாஸ் பண்ணிக்கலாம். இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை” என்று மன ஆறுதலைக் கொடுங்கள். ‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். ”ஃபெயில் ஆனா என்னப்பா? இதோட வாழ்க்கையே முடிஞ்சுபோகலை… இதுக்கு மேலயும் இருக்கு!” என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.
இப்படி இணக்கமாக வீட்டுச் சூழ்நிலை இருந்தால், எந்தப் பிள்ளையும் ரிசல்ட் வந்ததும் வீட்டை விட்டு ஓடிப் போகாது, தற்கொலை எண்ணமும் தோன்றாது’ என்கிறார்.
தற்கொலை சிந்தனைகள் உள்ளவர்களை கண்டறிவது எப்படி?
சாதாரண மனநிலையில் இருப்பவர்களை விடவும் இவர்கள் வேறுபட்டு காணப்படுவார்கள். உதாரணமாக மனக்கவலை தாழ்வு மனப்பான்மை மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் இவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
தற்கொலை சிந்தனைகள் உள்ளவர்களை கண்டறி
ந்து என்ன செய்ய வேண்டும்?
1.
ஆதரவு அளிகக வேண்டும்
2.
மனம் விடடு பேசவேண்டும்
3.
அன்பு செலுத்த வேண்டும்
அன்பு நண்பர்களே !
ஒரு வேலை போனால் இன்னொரு வேலை.
ஒரு காதலி உங்களை நிராகரித்தால
இன்னொருத்தி.ஒரு திருமணம்
முறிந்து போனால் இன்னொன்று அல்லது
சன்யாசம்.
கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணம்
பறிபோனால் வியாபாரத்தில் பெருநஷ்டம்
நேர்ந்தால் மீண்டும் வாழ்க்கையை
ஆரம்பப்புள்ளியிலிருந்து தொடங்கலாம்.
மீண்டும் பணம் சேர்க்கும் முயற்சியில்
இறங்கலாம்.
தற்கொலை செய்துகொள்பவர்களிடம் அதற்கு முன்னதாக சில மாற்றங்கள் காணப்படுகின்றன. உடனிருப்பவர்களால் அந்த மாற்றங்களை உணர முடியும்.
அடிப்படை குணாதிசயங்களில் மாற்றம் எதிலும் பிடிப்பின்றி தனியே ஒதுங்கியிருத்தல், அடிக்கடி எரிச்சலடைதல், வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை திடீரென அழுகை...கோபம்...துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல் மரணத்தைப்பற்றி அடிக்கடி பேசுதல் ஆகிய மாற்றங்களை நெருங்கிய தொடர்புடையவர்கள் கண்டறிந்து தற்கொலைகளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதிக நேரம் தூங்குபவர்களுக்குத்தான் தற்கொலை எண்ணம் தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.
சாதாரண மனநிலையில் இருப்பவர்களை விடவும் இவர்கள் வேறுபட்டு காணப்படுவார்கள். உதாரணமாக மனக்கவலை தாழ்வு மனப்பான்மை மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் இவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணம்
No comments:
Post a Comment